top of page

நல்வரவு

அடிப்படை உளசமூகத் திறன்கள் பயிற்சி

அடிப்படை உளசமூகத் திறன்கள் பற்றிய இந்த குறுகிய பாடநெறி,  COVID-19 முன்னெச்சரிக்கைப் பணியாளர்களான உங்களையும், உங்கள் பயனாளிகளையும் பராமரித்துக் கொள்ள உதவும். இந்த பாடநெறி பின்வரும் ஐந்து செயற்கூறுகளைக் கொண்டுள்ளது 1) உங்கள் நலன் 2) நாளாந்த இடையீடுகளில் ஆதரவளிக்கும் தொடர்பாடல் 3) நடைமுறைச் சாத்தியமான உதவியை வழங்குதல் 4) மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் மற்றும் 5) குறிப்பான விசேட நிலைமைகளில் உதவுதல்.  இந்த பாடநெறி முதன்மையாக COVID-19 முன்னெச்சரிக்கைப் பணியாளர்களுக்கு உதவி வழங்க வடிவமைக்கப்பட்டாலும் இந்த திறன்கள் ஏனைய நெருக்கடி சூழ்நிலைகளிழும் பதிலிறுப்புப் பணியாளர்களினால் பயன்படுத்தபடலாம்.

Screenshot 2020-09-11 at 14.02.11.png

செயற்கூறு 1

உங்கள் நலன்

உங்கள் நலனைப் பேணும் அதே வேளையில் வேறொருவருக்கு உதவுவதற்கான முக்கிய விளக்கவுரைகளுக்கு ஒரு அடிப்படை அறிமுகத்தை இந்தத் தொகுதி உங்களுக்கு வழங்கும். 


•1.1  உங்கள் நலன்: ஒரு அறிமுகம்  

•1.2 உங்கள் நலன்: உங்கள் மன அழுத்த அறிகுறிகளை அடையாளம் காணுதல்  

•1.3 உங்கள் நலன்: நீங்களே உங்களைக் கவனித்துக்கொள்ளுதல் 


இந்த 3 காணொளிகளையும் நீங்கள் பார்த்தபின் சம்பவ கற்கையில் உங்கள் புதிய அறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராயுங்கள்.  

செயற்கூறு  2

ஆதரவளிக்கும் தொடர்பாடல் 

இந்த தொகுதி ஆதரவளிக்கும் தொடர்பாடலை ஆராயும்இ இவை நெருக்கடி சூழ்நிலைகள் மற்றும் அன்றாட தொடர்புகளில் மற்றவர்களுடன் இணைப்பை ஏற்படுத்த முக்கியமானது. இந்தத் தொகுதியில் பின்வரும் பிரிவுகள் உள்ளன:  

•2.1 சகல இடைத்தொடர்புகளிலும் ஆதரவளிக்கும் தொடர்பாடல்: ஒரு அறிமுகம்  

•2.2 சகல இடைத்தொடர்புகளிலும் ஆதரவளிக்கும் தொடர்பாடல்: செவிமடுக்கப் பழகுதல் 

•2.3 ஆதரவளிக்கும் தொடர்பாடல் : தொலைவிடத்திலிருந்து ஆதரவை வழங்குதல் 

இந்த பிரிவுகளை நீங்கள் படித்த பிறகுஇ இரண்டு சம்பவ கற்கைகளையும் பார்த்து உங்கள் கற்றலை பிரதிபலிக்கவும். 

செயற்கூறு 3

நடைமுறைச் சாத்தியமான உதவியை வழங்குதல் 

அடிப்படை உளவியல் சமூகத் திறன்களில் நடைமுறைச் சாத்தியமான உதவியை வழங்குதல் ஒரு முக்கிய அங்கமாகும். இந்தத் தொகுதி பின்வரும் தலைப்புக்களை உள்ளடக்கும்:  


•3.1 தகவல் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வழங்குதல் 

•3.2 மற்றவாடகளுடன் இணைப்பை ஏற்படுத்தல் 

•3.3 மற்றவர்கள் தமக்குத் தாமே உதவ அவர்களுக்கு உதவுதல் 


இந்த தொகுதியில் 2 சம்பவ கற்கைகள்; உள்ளன, அவை வெவ்வேறு வழிகளில் நாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை பிரதிபலிக்கவும், மதிப்பீடு செய்யவும் உதவும். 

செயற்கூறு 4

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் 

வெவ்வேறு நபர்கள் ஒரே நிலைமைகளுக்கு வெவ்வேறு எதிர் விளைவைக் கொண்டுள்ளனர். மன அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்களுக்கு உதவுவதல் பல கூறுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதி பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது: 

  

•4.1 மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்: ஒரு அறிமுகம் 

•4.2 பொதுவான மன அழுத்தமுடையவர்களுக்கு உதவுதல் 

•4.3 தீவிர மன அழுத்த எதிர் விளைவுகளை இனங்காணல்  

•4.4 தீவிர மன வேதனையில் உள்ளவர்களுக்கு ஆதரவளித்தல்  

•4.5 நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்  

சம்பவ கற்கையைப் பார்த்து, இது உங்கள் அனுபவத்துடன் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். 

செயற்கூறு 5

விசேட நிலைமைகள்  

சமூகத்தில் உள்ள நபர்களுக்கு உதவும் போது எப்போதுமே நீங்கள் கவனிக்க வேண்டிய விசேட சூழ்நிலைகள் உள்ளன. இந்தத் தொகுதி பின்வருவனவற்றை உள்ளடக்கியது: 

•5.1 விசேட நிலைமைகளில் மக்களுக்கு உதவுதல்: எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களை இனங்காணல்   

•5.2 எளிதில் பாதிப்படையகூடிய குழுக்கள் 

•5.3 பாதிப்படையகூடிய மக்களுக்கு உதவுதல் 

நீங்கள் அனைத்து செயற்கூறுகளையும் முடித்துவிட்டீர்களா?


“நீங்கள் அனைத்து செயற்கூறுகளையும் பூர்த்திசெய்தவுடன்இ நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டீர்கள் என்பதை அறிய இந்த இறுதி ஆய்வை மேற்கொள்ளுங்கள்!” 

பிற சேவைகள்

நெருக்கடி காலங்களில் மக்களுக்கு உதவ நாம் பெரும்பாலும்  பிற சேவை வழங்குநர்களுடன் இணைக்க வேண்டும். பொருத்தமான சேவைகளை அடைவது என்பது நீங்கள் உதவி செய்யும் நபர்கள் அல்லது உங்களுக்கு தேவையான ஆதரவை அணுகுவதை உறுதி செய்வதற்கான முக்கியமான படியாகும்

ஒப்புரை

இந்த பாடநெறி Lotus Circle இன் உதவியுடன் The Asia Foundation மற்றும் The Good Practice Group இனரால் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கம் Inter-Agency Standing Committee வெளியீடான “அடிப்படை உளவியல் சமூகத்திறன்கள்: COVID-19 பணியில் ஈடுபடுபவர்களுக்கான ஒரு வழிகாட்டி”இலிருந்து மாற்றப்பட்டுள்ளது. பாட உள்ளடக்கங்களின் தழுவல் மற்றும் வடிவமைப்பு திவ்யா கந்தையா, சப்ரீனா காதர், நிலுஷ்கா பெரேரா, குசல வெட்டிசிங்க மற்றும் ஆனந்த கலபாட்டியால் மேற்கொள்ளப்பட்டது. இந்த தழுவலை தமிழ் மொழியில் சாயிசனாதனி ஸ்ரீதரன் மற்றும் திவ்யா கந்தையா ஆகியோரும் சிங்கள மொழியில் உவசர ஆரம்பவெல மற்றும் ஹஸ்னா பாயிஸ் ஆகியோரும் மொழிபெயர்த்துள்ளனர். தொகுதி காணொளிகளை திவ்யா கந்தையா, புண்ணியமூர்த்தி nஐயதீபா, ஆலோக வீரசேகர மற்றும் ஆனந்த கலபாட்டி ஆகியோர் விபரித்தனர்.   

Inter-Agency Standing Committee (IASC) இந்த மொழிபெயர்ப்பு / தழுவலை உருவாக்கவில்லை. இந்த மொழிபெயர்பின் உள்ளடக்கம் அல்லது துல்லியத்திற்கு IASC பொறுப்பல்ல. இந்த தழுவலில் கூடுதலான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 2020இல் வெளியிட்ட அசல் ஆங்கில பதிப்பு “Inter-Agency Standing Committee. Basic Psychosocial Skills: A Guide for COVID-19 Responders” பிணைப்பு மற்றும் உண்மையான பதிப்பாக இருக்கும்: 


இந்த மொழிபெயர்ப்பு / தழுவல் மூல வெளியீட்டின் அதே உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது: CC BY-NC-SA 3.0 IGO (https://creativecommons.org/licenses/by-nc-sa/3.0/) 

bottom of page